தனிமையில் பிரித்தானியா! அவசர ஆலோசனையில் பிரதமர்!!

தனிமையில் பிரித்தானியா! அவசர ஆலோசனையில் பிரதமர்!!

மிக வேகமாக பரவிவரும் பிறழ்வடைந்த “கொரோனா” வைரஸ் காரணமாக, பிரித்தானியாவின் லண்டன் நகரம் முற்றாக முடக்கப்பட்டதை தொடர்ந்து, பிரித்தானியாவுக்கான விமானசேவைகளை பல நாடுகள் முற்றாக நிறுத்தியுள்ளதோடு, பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்களை தங்கள் நாடுகளில் தரையிறங்கவும் அனுமதி மறுத்துள்ள.

இதேவேளை, பிரித்தானியாவுக்கும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான தொடரூந்து மற்றும் வாகன போக்குவரத்து பாதையான, “Eurotunnel” என்னும், நிலக்கீழ் பாதையை மூடியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளதை தொடர்ந்து, பிரித்தானியாவுக்கான உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய நுகர் பொருட்கள் மற்றும் “கொரோனா” எதிர்ப்பு மருந்து வழங்கல் முற்றாக தடைப்படும் அபாயம் தோன்றியுள்ளதால், தற்போது கையிருப்பிலுள்ள பாவனைப்பொருட்கள் முடிவடையும் பட்சத்தில் பிரித்தானியாவில் தட்டுப்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கான பிரதான தரை வழங்கல் பாதையான “Eurotunnel” ஊடாக, பிரான்சிலிருந்தோ அல்லது வேறு ஐரோப்பிய நாடுகளிலிருந்தோ பாரவூர்திகள் மூலம் அத்தியாவசியப்பொருட்கள் பிரித்தானியாவுக்குள் எடுத்துவரப்பட்டாலும், பாரவூர்திகளை செலுத்தி வருபவர்கள் மீண்டும் தத்தமது நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலை உள்ளதால், பாரவூர்தி சாரதிகள் இதுவிடயம் தொடர்பில் மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலைமை தீவிரமடைந்துவருவதையடுத்து பிரித்தானிய பிரதமர் அவசர ஆலோசனைகளில் ஈடுபட்டிருப்பதாக இறுதித்தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments