அச்சத்தின் மத்தியில் நடைபெற்று முடிந்த குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் பொங்கல் வழிபாடு!

You are currently viewing அச்சத்தின் மத்தியில் நடைபெற்று முடிந்த குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் பொங்கல் வழிபாடு!

குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் பொங்கல் வழிபாடு இன்று பகல் (18.08.2023) வெள்ளிக்கிழமை பெரும் அச்சத்தின் மத்தியில் நடைபெற்று முடிவடைந்திருக்கிறது.!

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய பக்தர்களாலும் இன உணர்வாளர்களாலும் இன்று பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,

அதனைத் தடுக்கும் வகையில் பேரினவாதிகளாலும் பௌத்த பிக்குகளாலும் தென்னிலங்கையில் இருந்து பேரூந்துகளில் கொண்டுவரப்பட்டு இன்று காலை குருந்தூர் மலை பகுதியில் இறக்கப்பட்ட சிங்கள மக்களதும் சிங்கள பௌத்த பிக்குகளினதும்பெரும் பிரசன்னத்துடனும்
குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட சிங்கள சட்டவிரோத குருந்தி விகாரையின் விகாராதிபதியின் இனவாத அட்டூழியத்தின் மத்தியிலும்,

அங்கு நிலவிய சிறீலங்கா காவல்த்துறையின் தமிழ் பக்தர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை கெடுபிடிகளுக்கு மத்தியிலும் குருந்தூர் மலையில் பொங்கல் பூஜை வழிபாடுகள் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றன.

இந்தப் பொங்கல் வழிபாட்டில் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான கஜேந்திரகுமார்- பொன்னம்பலம்,கட்சியின்பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நடராஜர்-காண்டீபன் உட்பட, கட்சியின்உறுப்பினர்களும் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்-சிறீதரன், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன்,அரசியல் பிரமுகர் துரைராஜா-ரவிகரன்,  ஆகியோரும் மற்றும் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அச்சத்தின் மத்தியில் நடைபெற்று முடிந்த குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் பொங்கல் வழிபாடு! 1

அச்சத்தின் மத்தியில் நடைபெற்று முடிந்த குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் பொங்கல் வழிபாடு! 2

 

அச்சத்தின் மத்தியில் நடைபெற்று முடிந்த குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் பொங்கல் வழிபாடு! 3

 

அச்சத்தின் மத்தியில் நடைபெற்று முடிந்த குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் பொங்கல் வழிபாடு! 4

அச்சத்தின் மத்தியில் நடைபெற்று முடிந்த குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் பொங்கல் வழிபாடு! 5

அச்சத்தின் மத்தியில் நடைபெற்று முடிந்த குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார் பொங்கல் வழிபாடு! 6

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments