இந்தியாவின் பிரபல வர்த்தகரான “கௌதம் அதானி” மீதான குற்றச்சாட்டுக்களையடுத்து, அவரது நிறுவனங்களின் பெறுமதிகள், பங்குச்சந்தையில் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், அதானி குழும நிறுவனங்களில் தான் செய்திருந்த முதலீடுகளை நோர்வே திரும்பப்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
தனது எண்ணெய் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானத்தை இவ்வாறு உலகெங்கும் முதலீடு செய்துவரும் நோர்வே, அதானி குழுமத்தின் நிறுவனங்களில் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலீடுகளை வைத்திருந்ததாகவும், இப்போது முற்றாக அனைத்தையும் திரும்ப பெற்றுள்ளதாகவும் தெரிவித்திருப்பதோடு, இவ்வருட ஆரம்பத்திலிருந்தே அதானி குழுமத்தின் வீழ்ச்சியை அவதானித்ததாகவும், அதானி மீதான பொருளாதார முறைகேடுகள், “Hindenburg Research” என்ற பொருளாதார முதலீடுகளை ஆய்வு செய்யும் நிறுவனத்தால் வெளிக்கொணரப்பட முன்னதாகவே, அதானி குழுமத்தில் தமக்கிருந்த பங்குகளை விற்பனை செய்யத்தொடங்கியதாகவும் மேலும் தெரிவித்துள்ளது.
தொடர்புபட்ட செய்தி: