பிரித்தானியாவில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரிப்பு!

You are currently viewing பிரித்தானியாவில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரிப்பு!

பிரித்தானியாவில் வாள்வெட்டு சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாகவும், 1946க்கு பின்னர் உச்சம் கண்டுள்ளதாகவும் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, 16 மற்றும் 17 வயதுடைய சிறார்களில் இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையான 12 மாதங்களில் மட்டும் பிரித்தானியாவில் 282 கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளது.

இது முந்தைய ஆண்டைவிட 20% அதிகம் என்றே தெரியவந்துள்ளது. மட்டுமின்றி, 77 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கியதில் இருந்து இது இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் அதிகபட்ச எண்ணிக்கை என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கொல்லப்பட்ட 282 பேர்களில் 51 பேர்கள் 13 முதல் 19 வயதுடையவர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, 16 முதல் 17 வௌஅதுடையவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதுடன், 10 முதல் 24 பேர்கள் என பதிவாகியுள்ளது.

சட்டவிரோத குழுக்களில் இளையோர்கள் அதிக எண்ணிக்கையில் இணைவதாலையே, இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இளையோர்களிடையே அதிகரிக்கும் இந்த வாள்வெட்டு குற்றங்களை கட்டுப்படுத்த அரசாங்கம் பரிதாபமான முறையில் தோல்வி கண்டுள்ளதாக தொழில் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வாள்வெட்டு குற்றங்களில் சிறை செல்லும் நபர்களின் எண்ணிக்கையும் பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கத்தியை பயன்படுத்தி மிரட்டியவர்கள் எண்ணிக்கை மட்டும் 24,546 என புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் லண்டனில் மட்டும் கடந்த 2021ல் வாள்வெட்டுக்கு 30 இளைஞர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments