முறைகேடு குற்றச்சாட்டு! செல்வந்தர் பட்டியலிலிருந்து சறுக்கினார், அதானி!!

You are currently viewing முறைகேடு குற்றச்சாட்டு! செல்வந்தர் பட்டியலிலிருந்து சறுக்கினார், அதானி!!

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், உலகின் பெரும் செல்வந்தர்களின் வரிசையில் முன்னணியில் இருந்தவருமான “கெளதம் அதானி” மீது, பங்குச்சந்தை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியது உட்பட முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் வெளிவந்ததையடுத்து, அதானி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் சுமார் 48 பில்லியன் டொலர்கள் பெறுமதியான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலகின் மூன்றாவது செல்வந்தர் என்ற தகைமையோடும், சுமார் 126 பில்லியன் டொலர்கள் சொத்து மதிப்போடும் இருந்த அதானி, தனக்கு பங்குச்சந்தை தொடர்பில் சோடிக்கப்பட்ட தகவல்களை வழங்கியதோடு, வருடாந்த கணக்குவழக்குகளில் தவறான தகவல்களையும் வழங்கியிருந்தாரென்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதால், உலகின் 7 செல்வந்தர் என்ற இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, சொத்து மதிப்பும் 96 பில்லியன் டொலர்களாக குறைவடைந்துள்ளது.

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments