அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வுக்குட்படுத்தி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

You are currently viewing அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வுக்குட்படுத்தி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கை செய்யவேண்டும் என முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக  அமையத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

புதுவருடம் தொடங்கி  புதுவருட அன்றே புதுவரவு மக்களுக்கு இலங்கை அரசாங்கம் பேரதிச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

2024 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் முதலாம், இரண்டாம் வாசிப்பிலே சமர்ப்பிக்கப்பட்ட விடயத்தில் உண்மைகளை முடிமறைத்து 97 பொருட்களின் விலைவாசி உயர்த்தியிருக்கின்றது.

இவ்வருடத்திலே இலங்கை வாழ்மக்கள் மீது பெரும் வரிச்சுமையினை அரசு செலுத்தியுள்ளது.

குறிப்பாக வரிக்குள்ளே மதுபானம், புகைத்தல், ஆடம்பர, இலத்திரனியல் பொருட்களுக்காக பொருட்களுக்கு விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு விலை உயர்வடைந்திருப்பது பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த 30வருடம் யுத்த நடந்தபோதிலும் கூட இப்படியான வரி அதிகரிக்கப்படவில்லை. விலைவாசியும் அதிகரிக்கப்படவில்லை. பொருட்தட்டுப்பாடு எற்படவில்லை.

30 வருட யுத்தத்திலும் கூட பல்லாயிரம் ரூபாக்களை செலவளித்த இவ்வரசாங்கம் 30 வருட யுத்தம் முடிந்த பிற்பாடு 2024 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இவ்வளவு  வற்வரியிலான சுமையினை மக்கள் மீது சுமத்தியுள்ளது.

எற்கனவே இருந்த அரசாங்கங்களும் ஊழலுக்கு,  மோசடிக்கு, துஸ்பிரயோகத்திற்கு பெயர்போன அரசாங்களுக்கு இருந்தது. மக்களால் விரட்டப்பட்ட அரசாங்கமாக காணப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆதரவு பெறமால் நாடாளுமன்ற பெரும்பாண்மையினை பெற்றுக்கொண்டு வந்து ஜனநாயக விரோத பாதீட்டினை நிறைவேற்றியுள்ளார்.

குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் மீதான வரி அதிகரிப்பானது ஏழை மக்கள், அன்றாடம் கூலித்தொழினை செய்வர்கள், வடக்கு – கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மலையக  மக்களது வயிற்றில் பேரிடியாக காணப்படுகின்றது.

இவ் பாதீட்டினை சமர்ப்பித்து, மக்களுக்கு எந்த பயனும் இல்லாது வாட்டிவதைக்கின்ற அரசாங்கமாக மாறியுள்ளது. பாதீடு தொடர்பாக குரல்கொடுக்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய விடயங்களை பேசாமல், தடுத்து நிறுத்தவேண்டிய விடயங்களை தடுத்து நிறுத்தாமல்,  பாதீட்டுக்கு எதிராக  வாக்களிக்கமாலும் இருந்துகொண்டு தற்போது வெளியில்வந்து மக்கள் மீது பாதீடு தொடர்பாக குரல் கொடுக்கின்றார்கள்.

அரசாங்கம் வரிசலுகை தொடர்பாக மீளாய்வு செய்ய வேண்டும். உடனடியாக அத்தியாவசியப் பொருட்களுக்கான வரியினை மீளாய்வு உட்படுத்தி நீக்குவதற்கான நடவடிக்கை செய்யவேண்டும்.

இப்போது அத்தியாவசிய பொருட்களில் வெங்காயம் 530  ரூபா விற்கின்றது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொட்டுக்கொண்டு இருக்கின்றது.

திரைமறைவிலே திட்டமிட்டு கபடமாக கொண்டுவந்து மக்கள் மீது சுமத்தப்பட்ட வரியினை நீக்கவேண்டும். நீக்கதவறும் பட்சத்தில் தென்னிலங்கை மக்களும், நாடு பூராக வசிக்கும் மக்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். அது மக்கள் போராட்டமாக வெடிக்கும் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments