அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்! – சுழற்சி முறையில் வகுப்புகள்!

You are currently viewing அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்! – சுழற்சி முறையில் வகுப்புகள்!

பாடசாலைகளில் நாளை முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களுக்கு அமைய கட்டம் கட்டமாக ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

டவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய பாடசாலைகளில் சகல மாணவர்களுக்கும் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 200க்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர் தொகையைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவில் திங்கட்கிழமைகளில் முதலாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமைகளில் இரண்டாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்கள் மாத்திரம் சமூகமளிக்க முடியும் என்றும் புதன்கிழமைகளில் மூன்றாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 4, 5 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தரம் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும்.

முன்னர் காணப்பட்ட கால எல்லையின் அடிப்படையிலேயே இந்த சந்தர்ப்பங்களிலும் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 200 க்கும் அதிக எண்ணிக்கை கொண்டு பாடசாலைகளின் சிரேஷ்ட பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதற்கும் விசேட முறைமை பின்பற்றப்படவுள்ளது.

இதற்கமைய திங்கட்கிழமைகளில் 6,10,11,12, மற்றும் 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

அத்துடன் செவ்வாய்கிழமைகளில் 7,10,11,12, மற்றும் 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.

புதன்கிழமைகளில் 8,10,11,12, மற்றும் 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலை சமூகமளிக்க முடியும்.

வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் 9 முதல் 13 வரையான தரங்களில் கல்வி மாணவர்களை பாடசாலைக்கு அழைக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள