அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் றொம்மன் வளாகத்தின் பிரத்தியேக ஆண்டுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்.

You are currently viewing அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் றொம்மன் வளாகத்தின் பிரத்தியேக ஆண்டுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்.

தனிமனிதத்தவறை திருத்தி சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிசமைக்கவேண்டுமென தமிழ்த்தேசிய அமைப்புகளாலும் மக்களாலும் பாடசாலை பெற்றோர்களாலும் கேட்டுக்கொண்டதை கேலி செய்து நான் என்ற அகங்காரபோதையால் இன்று பாடசாலையை சட்டத்தின் முன் நிறுத்திய பெருமை அன்னை தலைமை நிர்வாகியையும் அவருக்கு பக்கதுணையாக நின்ற சிலரையுமே சேரும்.

இனியும் சமூகத்தின் நலன் கருதி விட்டுவிலகாது ஒட்டிக்கொண்டு இருப்பார்களானால் தமிழ் சமூகத்தை மேலும் அவலநிலைக்குள் வீழ்த்துகின்ற பெருமையும் இவர்களையே சாரும்.

ஒருதனிமனிதன் மீதான விமர்சனங்களும் பதவியை விட்டு வெளியேறி புதியவர்களுக்கும் புதிய சிந்தனைக்கும் வழிவிடவேண்டுமென கேட்டுக்கொண்டதை ஒரு சமூகத்தின் பிரச்சனைபோலும் அல்லது தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் பாடசாலைக்கு எதிரானவர்கள் போலும் ஒரு விம்பத்தை உருவாக்கி நோர்வே தமிழ்மக்கள் மத்தியில் குழப்பத்தினையும் பொய்களையும் விதைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் இனியாவது பாடசாலையின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள் பதவிகளை புதியவர்களுக்கு வழிவிட்டு அவர்களை வாழ்த்தி பணி சிறக்க உதவினால் இவர்கள் இதுவரை செய்த இழிநிலைகள் அகல்வதற்கான சாத்திப்பாடுகள் உள்ளன

அப்படி மறுதலித்தால் இவர்கள் தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் பணியாற்ற வந்தார்கள் என்பது முற்றிலும் பொய்யாக பதிவாகி வரலாற்றில் அழிக்கமுடியாத கறையை தன்னகத்தே அப்பிக்கொள்ளும் நிலைதான் தோன்றும்.

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் றொம்மன் வளாகத்தின் பிரத்தியேக ஆண்டுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும். 1

 

4.3 4 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments