அபிவிருத்தி என்றபெயரில் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிப்பு!

You are currently viewing அபிவிருத்தி என்றபெயரில் மக்களின் வாழ்வாதாரங்கள் அழிப்பு!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் வீதி போடுவதாக கூறி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அதில் நின்ற வாழ்வாதர பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூங்கிலாறு கிராமத்திற்கு செல்லும் வீதிகள் முற்று முழுதாக பாதிக்கப்பட்ட நிலையில் கிராமத்தின் தொங்கலில் பத்து குடும்பங்கள் உள்ள வீதியினை மக்களின் காணிகளை பிடித்து 32 அடி அகலம் கொண்ட வீதியாக போடுவதற்காக புதுக்குடியிருப்பு பிரதேச செயலம் ஊடாக சபரிகம திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

220 மீற்றர் தூரம் கொண்ட வீதியினை போடுவதில் அந்த பிரதேசத்தினை சேர்நத மாதர் அபிவிருத்தி சங்கம் ஒன்று ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கமை மக்களின் காணிகளில் உள்ள வாழை,கத்தரி,மரவள்ளி,தெனனை,முதிரை,போன்ற மரங்;களை ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் டோசர் மூலம் அளித்து அவர்களின் காணிக்குள்ளேயேபோட்டுள்ளார்கள்.
இதனால் காணியின் உரிமையாளரும் கிகராமத்தினை சேர்ந்;த மக்களும் விசனம் தெரிவிததுள்ளார்கள்.

தங்கள் வீடுகளுக்கு செல்லும் வீதியினைகூட போட்டுத்தரமுடியாதவர்கள் காணிகளை ஊடறுத்து புதிய வீதிகளை அமைக்கின்றாhகள் எங்கள்கிராமத்தில் பேருந்துகூட வரமுடியாத நிலை பேருந்தின் தேவைகூட இல்லாத நிலையில் 32 அடி அகலம் கொண்ட வீதிக்காக மக்களின் காணிகளை அபகரித்து அபிவிருத்தி என்ற போர்வையில் வாழ்வாதாரத்தினை அழித்துள்ளதாக பாதிக்கப்பட்டமக்கள் தெரிவித்துள்ளார்கள்.

மூங்கிலாறு கிராமத்தின் கிராம சேவகர் ஊடாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது சம்மந்த பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பகிர்ந்துகொள்ள