தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன்!;மஹிந்தவிற்கு செருப்படி!

You are currently viewing தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன்!;மஹிந்தவிற்கு செருப்படி!

“பயங்கரவாதிகளுக்குப் புனர்வாழ்வளித்ததாக கூறும் மஹிந்த ராஜபக்‌ஷ, 2005ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனைச் சந்திக்க ஆசைப்பட்டது ஏன்?” என, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணத்தில், இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2002ஆம் ஆண்டில், அப்போதைய நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பிரபாகரனுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றினை செய்திருந்தாரென்றார்.

அத்தோடு, இராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும் ஏன் தலைவர் பிரபாகரனைப் பாராட்டுகிறார்கள் எனவும், அவர் வினவினார்.

பகிர்ந்துகொள்ள