அமெரிக்காவிற்கு 290 என்ற எண் நினைவிருக்க வேண்டும் – ஹசன் ரவுகானி!

  • Post author:
You are currently viewing அமெரிக்காவிற்கு 290 என்ற எண் நினைவிருக்க வேண்டும் – ஹசன் ரவுகானி!

ஈரானில் உள்ள 52 முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், ஒருபோதும் ஈரான் நாட்டிற்கு மிரட்டல்கள் விடுக்க வேண்டாம் என்றும் போர் அறிவிக்கப்பட்டால அது அமெரிக்காவுக்கு தான் தோல்வியாக முடியும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி எச்சரித்துள்ளார்.
கடந்த 1979-ம் ஆண்டு ஈரான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த அதிகாரிகள் 52 பேர், ஈரானியர்களால் ஓராண்டுக்கும் மேலாக பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். அதை குறிப்பிட்டே 52 இடங்களில் தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தனது டுவிட்டர் பக்கத்தில், “52 என்ற எண்ணை குறிப்பிடுபவர்களுக்கு 290 என்ற எண்ணும் நினைவிருக்க வேண்டும். ஒருபோதும் ஈரான் நாட்டிற்கு மிரட்டல் விடுக்க வேண்டாம்” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த 1988-ம் ஆண்டு வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரானிய விமானம் ஒன்று அமெரிக்க போர்க்கப்பலால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 66 குழந்தைகள் உள்பட 290 பேர் கொல்லப்பட்டனர். இதை குறிப்பிடும் விதமாக தற்போது 290 என்ற எண்ணை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும் என ஹசன் ரவுகானி கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள