சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில், நெரிசலில் சிக்கி 40 பேர் பலி!

  • Post author:
You are currently viewing சுலைமானியின் இறுதி ஊர்வலத்தில், நெரிசலில் சிக்கி 40 பேர் பலி!

ஈராக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடல் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஒரு பல்கலைக்கழகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சுலைமானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு லட்சக்கணக்கான மக்கள் அந்த பகுதியில் குவிந்தனர். 
அவர்கள் அனைவரும் கறுப்பு நிற உடையில் வந்திருந்தனர். இதனால் டெஹ்ரான் நகரமே கறுப்பு நிறமாக மாறியது போல காட்சியளித்தது.
மக்கள் தங்கள் கைகளில் கறுப்பு மற்றும் ஈரான் நாட்டு கொடிகளை ஏந்தியபடி அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். இறுதி சடங்கின்போது, அயதுல்லா அலி காமெனி கண்ணீர் விட்டுக் கதறி  அழுதார்.
இறுதி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி  குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர் என்றும் மேலும் 213 பேர் காயமடைந்தனர் என்றும் செய்திகள் கூறுகின்றன. (தகவல்: அல்-அரேபியா)

பிந்திய செய்தி
ஈரான் ராணுவ தளபதி சுலைமானி இறுதி ஊர்வலத்தில் நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. (தகவல்: அல்-அரேபியா)

பகிர்ந்துகொள்ள