ஐ.நா. செயலரை உளவு பார்த்த அமெரிக்கா! அமெரிக்காவிடமே முறையிடும் ஐ.நா!!

You are currently viewing ஐ.நா. செயலரை உளவு பார்த்த அமெரிக்கா! அமெரிக்காவிடமே முறையிடும் ஐ.நா!!

ஐக்கியநாடுகள் சபையின் பொதுச்செயலாளர், “Antonio Guterres” அவர்களையும் அமெரிக்கா உளவு பார்த்து வந்துள்ளதாக வெளிவந்த செய்திகளையடுத்து அதிர்ச்சியடைந்துள்ள ஐ.நா. செயலாளர் அலுவலகம், அமெரிக்காவின் இச்செயலுக்கு எதிராக அமெரிக்கவிடமே முறைப்பாடு செய்துள்ளதாக “Reuters” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் கசியவிடப்பட்ட, அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான “Pentagon” மற்றும் அமெரிக்க உளவுத்துறையான “CIA” போன்றவற்றின் இரகசிய ஆவணங்களில் இதுவிடயமும் அடக்கியுள்ளதாக குறிப்பிடும் “Reuters”, ஐ.நா. பொதுச்செயலாளர், ஐ.நா.வின் ஏனைய உயரதிகாரிகளோடு நடத்திய சந்திப்புக்களனைத்தையும் அமெரிக்கா ஒட்டுக்கேட்டுள்ளதாகவும், ஐ.நா.வின் சாசனத்தின்படி, இவ்வாறான நடவடிக்கைளில் அமெரிக்கா ஈடுபடுவது மிகவும் பாரதூரமானது எனவும் ஐ.நா. செயலரின் அலுவலகம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடுகிறது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments