அமெரிக்காவில் விமான விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு !

You are currently viewing அமெரிக்காவில் விமான விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு !

breaking

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலம், ஹாட் ஸ்பிரிங்ஸ் நகரின் இங்கல்ஸ் பீல்டு விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விமானம் ஓடுபாதையில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விமானத்தில் இருந்த குழந்தை உள்ளிட்ட 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்தாக கூறப்படுகிறது.

விர்ஜீனியாவின் மேற்கு எல்லைக்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு திணைக்களம் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply