காசா நோக்கி செல்லும் அமெரிக்க இராணுவக் கப்பல்!

You are currently viewing காசா நோக்கி செல்லும் அமெரிக்க இராணுவக் கப்பல்!

அமெரிக்க இராணுவக் கப்பல் ஒன்று காசா கடற்கரையில் ஒரு தற்காலிக கப்பல் துறைமுகத்தைக் கட்டுவதற்கான உபகரணங்களை சுமந்து கொண்டு செல்வதாக இராணுவம் தெரிவித்துள்ளது. ஜெனரல் ஃபிராங்க் எஸ் பெஸ்ஸன் என்ற ஆதரவுக் கப்பல், வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டுள்ளது.

கடல் வழியாக காசாவுக்குள் உதவி பெற உதவும் வகையில் மிதக்கும் துறைமுகத்தை அமெரிக்கா கட்டும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதை அடுத்தே தற்காலிக கப்பல் துறைமுகம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா பகுதியில் பஞ்சம் ஏற்படுவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது என்றும், குழந்தைகள் பட்டினியால் வாடுகின்றனர் என்றும் ஐ.நா எச்சரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 8 ஆம் திகதி பாராசூட் சரியாகத் திறக்காததால், கீழே விழுந்த உதவிப் பொதியால் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் 1,000 துருப்புக்களின் உதவியுடன் கப்பல் கட்டுவதற்கு 60 நாட்கள் வரை ஆகலாம் என்று பென்டகன் கூறியுள்ளதோடு, அவர்களில் யாரும் கரைக்கு செல்ல மாட்டார்கள் என்று பென்டகன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments