அமெரிக்காவில் 36 பேரை பலியெடுத்த ஹவாய் காட்டுத் தீ !

You are currently viewing அமெரிக்காவில் 36 பேரை பலியெடுத்த ஹவாய் காட்டுத் தீ !

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள மௌய் தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 36 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.

நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வீசிவரும் டோரா சூறாவளியின் தாக்கத்தில் உருவான பலமான காற்று இந்த காட்டுத்தீயை மோசமாக்கியுள்ளது.

பெருமளவு உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் ஹவாய் மாநிலத்தில் மௌய் தீவில் கடந்த செவ்வாயன்று ஏற்பட்ட இந்த காட்டுத் தீ இந்த தீவில் மேற்குக் கரையை நேற்று பெரும் தீப்புயலாக தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

வேகமாக பரவிய இந்த தீயில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் உட்பட்ட ஏராளமான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன.

ஒரு காலத்தில் ஹவாயின் தலைநகரமாகவும், தற்போது முக்கிய சுற்றுலா மையமாகவும் விளங்கும் ஹைனாவில் அதிக அளவான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

ஹவாய் மாநில வரலாற்றில் இது தான் மிகக் கொடிய காட்டுத் தீ என ஹவாய் பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டல தீ நிபுணர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு எழுதப்படும் வரை 36 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மௌய் தீவின் நிலைமை பயங்கரமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள மீட்புப் பணியாளர்கள் ஆயிரக்கணக்கான மக்களை மீட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஹவாயில் தீ தடுப்பு நடவடிக்கைக்கு உதவுமாறு கடலோர காவல்படை, மற்றும் கடற்படைக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments