அமெரிக்காவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (Air Traffic Control) கட்டமைப்பில் ஏற்பட்ட தகவல் தொடர்பு கோளாறு காரணமாக, அமெரிக்கா முழுவதும் அனைத்து விமானப் புறப்பாடுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சுமார் 2,000 விமானப் பயண சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) கோரிக்கையைத் தொடர்ந்து, ஐரோப்பிய விமான நிலையங்களிலிருந்தும் அமெரிக்காவுக்கான அனைத்து விமானப் புறப்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது






