காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதலும் ஆக்கிரமிப்பும்!

You are currently viewing காசாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதலும் ஆக்கிரமிப்பும்!

காசா நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துஃப்பா (Tuffah) குடியிருப்புப் பகுதியில் இன்று காலை இஸ்ரேலியப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீனர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை அல் ஷிஃபா மருத்துவமனை அங்குள்ள செய்தியாளர்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், உயிரிழந்தவரின் அடையாளம் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்த தகவல்களும் எதிர்பார்க்கப்படுகின்றன

இதேவேளை

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரைச் சூழவுள்ள பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு பலஸ்தீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வஃபா தெரிவித்துள்ளது.

சிலாட் அல் ஹரிதியா மற்றும் டெய்ர் அபூ தய்ஃப் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் உள்ள அவர்களது வீடுகளில் இஸ்ரேலியப் படையினர் நடத்திய சோதனைகளைத் தொடர்ந்து இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply