அர்சுனா மீது விசனம் தெரிவித்துள்ள விவசாயிகள்!

You are currently viewing அர்சுனா மீது விசனம் தெரிவித்துள்ள விவசாயிகள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் வாழ்வாதாரமான இரணைமடு நீர்ப்பாசனத் திட்டத்தையும், அதன் கீழ் இயங்கும் 28 கமக்கார அமைப்புகளையும் இலக்கு வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் முன்னெடுத்து வரும் போலிப் பிரசாரங்கள், வடக்கின் விவசாயக் கட்டமைப்பை நசுக்கும் ஒரு ‘பெரும் சதி’ என இரணைமடு விவசாயிகள் அமைப்பு போர்க்கொடி தூக்கியுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில்  (27) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட இரணைமடு கமக்கார அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவர், அர்ச்சுனா எம்.பி முன்வைத்துள்ள நிதி மோசடி மற்றும் அமைப்புகளின் பதிவு தொடர்பான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்தார்.

ஒரு பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதி, இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் முன் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் உண்மைகளைக் கேட்டறிந்திருக்க வேண்டும். எனவும் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply