நான்காம் கட்ட ஈழப்போரின் தலைவிதியைத் தீர்மானித்த ஆனந்தபுரம் சமருக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வழங்கிய செவ்வியை வெளியிடுகின்றோம்.
இச் செவ்வியை ஈழமுரசு பத்திரிகையின் பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா அவர்கள் 28.03.2009 சனிக்கிழமை அன்று மேற்கொண்டிருந்தார்.
தமிழ்த் தேசிய ஊடகமாக ஐ.பி.சி – தமிழ் வானொலி இயங்கிய பொழுது அதன் தலைமை செய்தியாசிரியராகப் பணியாற்றும் பொழுதே இச் செவ்வியைப் பா.நடேசனுடன் அவர் மேற்கொண்டிருந்தார்.
அன்றைய களநிலவரங்கள், ஆனந்தபுரம் சமருக்கு முன்னர் நம்பிக்கையோடும், வீராவேசமாகவும் போராளிகள் களமாடியமை மற்றும் புலம்பெயர் மக்களின் அறவழிப் போராட்டங்கள் பற்றி இச் செவ்வியில் விளக்கும் பா.நடேசன், மருந்துகள் இல்லாத சூழலில் தொற்றுநோய்களைத் தடுப்பதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் எடுத்துரைக்கின்றார்.
நன்றி சங்கதி 24