இதுவரையான வாக்குகள் அடிப்படையில் 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சி!

You are currently viewing இதுவரையான வாக்குகள் அடிப்படையில் 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சி!

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்த்தலில் செலுத்தப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தற்போதைய நிலவரத்தின் அடிப்பயைடில் பெற்றுக் கொண்ட வாக்குகள் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி 3வது இடத்தை பெற்றுள்ளது.

ஆட்சியமைக்கும் விடயத்தில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என்பவற்றுக்கிடையே நேரடிப் போட்டி நிலவுகின்ற நிலையில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் இரு கூட்டணிக்களுக்கும் அடுத்ததாக நாம் தமிழர் கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.

234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி பெரும்பாலான தொகுதிகளிலும் 3வது இடத்தில் உள்ளது.

தற்போதைய நிலையில் முதல் மூன்று இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை விபரம்…

திமுக கூட்டணி – 32,68,102 வாக்குகள் (8.58%)

அதிமுக் கூட்டணி – 29,66,670 வாக்குகள் (7.87%)

நாம் தமிழர் கட்சி – 4,31,137 (1.15%)

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments