இத்தாலியில் விபத்துக்குள்ளான புலம்பெயர் படகு: இருவர் பலி, 30 பேர் மாயம்!

You are currently viewing இத்தாலியில் விபத்துக்குள்ளான புலம்பெயர் படகு: இருவர் பலி, 30 பேர் மாயம்!

இத்தாலியின் லம்பேடுசா தீவு அருகே விபத்தில் சிக்கிய இரண்டு கப்பலில் இருந்து 57 பயணிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், 30 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்தில் சிக்கியவர்களில் இருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் இத்தாலி கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். துனிசியாவின் Sfax துறைமுகத்தில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றில் குடியேறும் பொருட்டு புலம்பெயர் மக்களின் இரண்டு படகுகள் புறப்பட்டுள்ளது.

ஆனால் சனிக்கிழமை இத்தாலியின் லம்பேடுசா தீவு அருகே விபத்தில் சிக்கியது. ஒரு படகில் 48 பேர்களும், இன்னொன்றில் 42 பேர்களும் பயணித்துள்ளதாக கூறுகின்றனர். உயி தப்பியவர்களை லம்பெடுசாவின் தென்மேற்கே 23 கடல் மைல் தொலைவில் கடலோர காவல்படையினர் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

அத்துடன் ஐவரி கோஸ்ட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் அவரது ஒரு வயது குழந்தையும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 30 பேர்கள் வரையில் மாயமாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் 2,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர் மக்கள் லம்பேடுசாவுக்கு வந்துள்ளனர். இத்தாலிய ரோந்துப் படகுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனக் குழுக்களால் இவர்கள் கடலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, லம்பேடுசாவுக்கு வந்தபோது பாறைகளில் படகு மோதியதில் சுமார் 20 பேர் வெள்ளிக்கிழமை முதல் ஒரு குன்றின் மீது சிக்கிக்கொண்டுள்ளனர். பலத்த காற்று வீசுவதால் கடல் வழியாக அவர்களை நெருங்கவோ ஹெலிகொப்டரில் மீட்கவோ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலியில் இந்த ஆண்டு மட்டும் கடல் மார்கமாக 92,000 பேர்கள் நுழைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 42,600 பேர்கள் இத்தாலியில் கடல் மார்க்கம் நுழைந்துள்ளனர் என்றே தெரியவந்துள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments