இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,73,763 லிருந்து 1,82,143 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 லிருந்து 5,164 ஆக உயர்ந்துள்ளது.
- 193 நோயாளிகள் நேற்று இறந்துள்ளதுடன், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியுள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 லிருந்து 86,984 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரே நாளில் 8,000 ஐத் தாண்டியது இதுவே முதல் முறையாகும் .
- மராட்டியத்தில் மொத்தம் 65,168 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரோனாவிலிருந்து 28,081 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,197 பேர் உயிரிழந்துள்ளனர்.