இந்தியாவில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு தொற்று!

  • Post author:
You are currently viewing இந்தியாவில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,73,763 லிருந்து 1,82,143 ஆக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,971 லிருந்து 5,164 ஆக உயர்ந்துள்ளது.

  • 193 நோயாளிகள் நேற்று இறந்துள்ளதுடன், மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியுள்ளது. மேலும், குணமடைந்தோர் எண்ணிக்கை 82,370 லிருந்து 86,984 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒரே நாளில் 8,000 ஐத் தாண்டியது இதுவே முதல் முறையாகும் .

  • மராட்டியத்தில் மொத்தம் 65,168 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மேலும் கொரோனாவிலிருந்து 28,081 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2,197 பேர் உயிரிழந்துள்ளனர்.
பகிர்ந்துகொள்ள