இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆளுநர், கடற்றொழில் அமைச்சுக்கு அறிக்கை!

You are currently viewing இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஆளுநர், கடற்றொழில் அமைச்சுக்கு அறிக்கை!

முல்லைத்தீவு கடற்பரப்புக்களில் தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எனவே இது தொடர்பில் வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்க்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலர் க.விமலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் நேரம் முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இரண்டு கடல் மயில் தூரத்தில் 200க்கும் மேற்பட்ட இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடியில் ஈடுபட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசம் மற்றும் சம்மேளனம் என்பவற்றின் பிரதிநிதிகளால் என்னிடம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

அதனடிப்படையீல் உடனடியாக நாம் அருகிலுள்ள வட்டுவாகல் கடற்படை முகாமிற்குத் தெரியப்படுத்தி இந்திய மீனவர்களை துரத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம். வடமாகாண ஆளுநருடனும் தெரியப்படுத்தினோம்.

தற்போது இது தொடர்பில் ஒரு அறிக்கை ஒன்றினைத் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுத்துக்கொண்டிருக்கின்றோம் என்றார்

பகிர்ந்துகொள்ள