இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம்!

You are currently viewing இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம்!

 

இந்தோனேசியாவின் பாலி கடல் பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவில் சக்சி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் மாதரம் நகருக்கு வடக்கே 201 கிலோமீட்டர் தொலைவிலும், பூமியின் மேற்பரப்பிலிருந்து 518 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய குறித்த நிலநடுக்கம் 7.1 ரிக்டர் அளவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பாலி மற்றும் லோம்போக் தீவுகளை அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

தொடர்ந்து 6.1 மற்றும் 6.5 ரிக்டர் அளவில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சேத விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என இந்தோனேஷியா இடர் முகாமைத்துவ தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments