இனப்படுகொலையாளி கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன!

You are currently viewing இனப்படுகொலையாளி கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன!

இனப்படுகொலையாளி கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கான வேட்புமனுவை வாபஸ் வாங்க எடுத்த தீர்மானமானது பல தரப்புக்களுடன் பல கட்டமாக நடாத்திய பேச்சுவார்தையின் பின்னர் எடுக்கப்பட்ட கடினமான தீர்மானமாகும்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை சீராக்க நாமும் சில தியாகங்களை செய்ய வேண்டும்.

இது அரசியல் இலாபம் தேடும் நேரமல்ல.அரசியல் ஸ்திரத்தனமையை ஏற்படுத்தி சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்து குறுகிய காலத்துக்குள் தேர்தல் ஒன்றுக்குள் செல்ல சஜித் பிரேமதாச அவர்கள் வரலாற்று முக்கியத்துவமிக்க முன்மாதிரி ஒன்றை செய்துள்ளார்.

இனப்படுகொலையாளி கோட்டபாய துரத்தப்பட்டாலும் பாராளுமன்றத்தில் அவரின் கிளைகள் எஞ்சியுள்ளன.

நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பாராளுமன்றத்துக்குள் இன்னும் பொதுஜன பெரமுனவே பெரும்பான்மை.

ஆகவே 45 க்கு மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியால் தனியே நின்று அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியாது என்பதே உண்மை.

ஆகவே போராட்டகாரர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளில் ஒன்றாக காணப்படும் ரணில் விக்ரமசிங்க துரத்தப்பட்ட வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த டலஸ் கூடடணியின் ஆதரவு அவசியம்.

ஆகவே டலஸ் வெற்றி பெற்றால் சர்வகட்சி அரசு அமைக்கப்பட்டு நாட்டில் நிலவும் அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு குறுகிய நெடுங்கால தீர்வுகளை காண ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

இதற்காக நாம் முன்வைத்துள்ள திட்ட வரைபை சிவில் அமைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஏற்றுக்கொண்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளனர், என தெரிவித்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments