இனவழிப்பு சிறீலங்கா இராணுவத்தில் கொரோனா தொற்று 60 ஆகியுள்ளது!

You are currently viewing இனவழிப்பு சிறீலங்கா இராணுவத்தில் கொரோனா தொற்று 60 ஆகியுள்ளது!

வெலிசற கடற்படை முகாமில் மேலும் 30 கடற்படையினருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவ தளபதி இனவழிப்பாளன் சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான வெலிசற கடற்படை முகாமை சேர்ந்த 29 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்த தொற்றாளர்களை தேடி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, கடற்படை சிப்பாய்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இனவழிப்பாளன் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

பின்னர் கடற்படை தளபதியின் உத்தரவின் பேரில் வெலிசற கடற்படை முகாம் முடக்கப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு முன்னர் கடற்படை முகாமில் கடற்படை சிப்பாய் ஒருவர் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார். அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் கடற்படை முகாமை சேர்ந்த 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று மட்டும், 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் தொகை 414 ஆக உயர்ந்துள்ளது.

பகிர்ந்துகொள்ள