தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி 15.02.2024 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் சுவிஸ் நாட்டினை வந்தடைந்து, மக்கள் பேரெழுச்சியோடு தொடர்ந்தும் பாசல்,சொலத்தூண், பேர்ண், பிறிபேர்க் ஊடாக பயணித்து, 02.03.2024 இல் லவுசாண் நகரில் நிறைவுற்றது.
03.03.2024 18 வது நாளாக லவுசான் நகரில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம், ஜெனீவா நோக்கி மனிதநேய அர்ப்பணிப்போடு பயணித்து ஜெனிவா எல்லையினை சென்றடைந்தது.தொடர்ந்தும் ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவை நோக்கி நீதிக்கான வேட்கையுடன் உறுதியுடன் கடந்து பயணிக்கின்றது.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பயணிக்கும் ஈருருளிப் பயணம், இன்று மனித உரிமை பேரவை முன்பாக அமைந்துள்ள, முருகதாசன் திடலில் மாபெரும் நீதிக்கான மக்கள் போராட்டத்துடன் இணைந்து கொள்ளும்.
இன்று (04.03.2924) நடைபெறும் போராட்டத்தில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்களை கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.