இன்று கிளிநொச்சியில் ஏற்ப்பட்ட கோர விபத்தில் 4பேர் பலி!

You are currently viewing இன்று கிளிநொச்சியில் ஏற்ப்பட்ட கோர விபத்தில் 4பேர் பலி!

இன்று (12) கிளிநொச்சி – ஏ35 வீதியில்   பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று மோதி குறித்த விபத்து ஏற்பட்டது.

விபத்தின் போது காரில் பயணித்த ஐவரில் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

அதேவேளை காருக்குள் நசியுண்ட இருவரின் உடல்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்டெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக  சிறீலங்கா காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வாகன விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் பெயர் விவரங்களும் வெளியாகியுள்ளன.

பொன்னையா பூபாலன் (வயது-46) விசுவமாடு முல்லைதீவு, சந்திரகுமார் தபேந்திரன் (வயது-34) புன்னைநிராவி கிளிநொச்சி, குணரத்தினம் குணதர்ஷன் (வயது-32) புன்னை நீராவி கிளிநொச்சி, யுவானி பிரசாத் (வயது-34) புன்னைநீராவி கிளிநொச்சி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களுடன் காரில் பயணித்த அருணாசலம் சுஜிதரன் (வயது -30) விசுவமடு மேற்கு முல்லைத்தீவு என்பவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply