இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் உள்ளிட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் பலி!

You are currently viewing இரட்டை குழந்தைகளை பிரசவித்த தாய் உள்ளிட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் பலி!

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்து உயிரிழந்துள்ளார்.

இணுவிலைச் சேர்ந்த அஜந்தன் இனியா (வயது-25) என்ற பெண்ணே இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

குழந்தைகள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளன. “கடந்த 4ஆம் திகதி கர்ப்பிணிப் பெண்ணுக்கு மூச்செடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் அன்றைய தினம் தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அன்றைய தினமே அவருக்கு கொவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அதன்பின்னர் தாயாருக்கான சிகிச்சைகள் தொடர்ந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்” என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை, யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் போதனா மருத்துவமனை விடுதியில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த 83 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறையைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 82 வயதுடைய பெண் ஒருவரும் வீட்டில் உயிரிழந்த நிலையில் கொவிட்-19 தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 322ஆக உயர்வடைந்துள்ளது.

இதேபோன்று

வவுனியாவில் கோவிட் தொற்று காரணமாக நேற்று 04 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 04 பேர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments