காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை, வவுனியாவில் புத்திர சோகத்தோடு தமிழ் இனத்தை விட்டுப் பிரிந்தார்!

You are currently viewing காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை, வவுனியாவில் புத்திர சோகத்தோடு தமிழ் இனத்தை விட்டுப் பிரிந்தார்!
காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை, வவுனியாவில் புத்திர சோகத்தோடு தமிழ் இனத்தை விட்டுப் பிரிந்தார்! 1

வவுனியா மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு நீதி கேட்டுப் போராடிய செபமாலை இராசதுரை (பிறப்பு: 1948.12.04) அவர்கள், தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே புத்திர சோகத்தோடு 2021.09.10 வெள்ளிக்கிழமை அன்று இறைபாதம் எய்தினார்.

2009ம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் இவரது மகனான இராசதுரை விஜி (பிறப்பு: 1987.05.07) என்பவரை கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்துச் சென்றிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக மகன் பற்றிய நம்பகரமான தகவல் ஏதும் அறியாமலேயே அன்னார் தமிழ் இனத்தை விட்டுப் பிரிந்துள்ளார்.

வவுனியாவில் ஆயிரத்து 668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் “காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தில்” தனது முதுமைக் காலத்திலும் செபமாலை இராசதுரை அவர்கள் நல்ல தேக ஆரோக்கியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டிருந்த நிலையில், அன்னார் தாளாத புத்திர சோகத்தோடு எம்மை விட்டுப் பிரிந்துள்ளார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து துயரில் பங்கெடுத்து, இறுதி அஞ்சலிகளை தமிழர் தாயக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments