இராணுவத்தால் கொல்லப்பட்டு குளத்தில் வீசப்பட்ட இளைஞன்!

You are currently viewing இராணுவத்தால் கொல்லப்பட்டு குளத்தில் வீசப்பட்ட இளைஞன்!

1996இல் அரியாலை தொடக்கம் 2025இல் முத்தையன்கட்டு வரைக்கும் “ஆர்மிக்காரன் நல்லா பழகுறான்” என நம்பி சென்ற நம் இளைஞர்கள்
எலும்புக்கூடுகளாகவும், சடலங்களாகவும் வீடு திரும்புவதே வரலாறு.

முல்லைத்தீவின் முத்தையன்கட்டு கிராமத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டவேளை அங்கு கிடக்கும் தகரங்களை எடுத்துவரச் சென்ற 5 இளைஞர்களும் சிறீலங்கா  இராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்களிலிருந்து தப்பிக்க நால்வரும் சிதறியோடிய நிலையில், அதில் நால்வர் நேற்று வீடு திரும்பியிருக்கின்றனர். காணாமல்போயிருந்த ஒருவர் இன்று காலை முத்தையன்கட்டுகுளத்திலிருந்து சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காணாமல் போன இளைஞனின் சகோதரரால் இச்சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சகோதரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராணுவத்தினர் தனது தம்பியை அடித்து கொலை செய்து விட்டு இன்றையதினம் அதிகாலை குளத்தில் போட்டுள்ளதாக இறந்தவரின் சகோதரர் மற்றும் அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply