யாழ்ப்பாணம், புல்லுகுளத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (08) மாலை இனங்காணப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், திருவள்ளுவர் பண்பாட்டு மையத்துக்கருகிலுள்ள குளத்தில் சடலமொன்று மிதப்பதாக சிறீலங்கா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்கு விரைந்த சிறீலங்கா பொலிஸார் சடலத்தை மீட்டதோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.






