இரு இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் கைது!

You are currently viewing இரு இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் வவுனியாவில்  கைது!

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்கா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதிகளில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1,700 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply