புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது !

You are currently viewing புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 5 பேர் கைது !

முல்லைத்தீவு கடற்கரை பகுதியில் முல்லைத்தீவு சிறீலங்கா பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது புதையல் தோண்ட பயன்படுத்தப்படும் இயந்திரம் ஒன்றுடன் 5 பேர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

வாகனம் ஒன்றில் ஸ்கானர் இயந்திரம் காணப்பட்டுள்ளமையினை தொடர்ந்து வாகனத்தில் இருந்து 5 பேரும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

வவுனியா,முள்ளிவாய்க்கால்,கொழும்பு,தம்புள்ள பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.  இவர்கள் மீதான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கையினை முல்லைத்தீவு சிறீலங்கா பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply