இலங்கையின் யுக்திய செயற்திட்டம்: ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி !

You are currently viewing இலங்கையின் யுக்திய செயற்திட்டம்: ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி !

இலங்கையின் போதைப்பொருள் பிரச்சினைக்கு அரசாங்கமானது பாரிய பாதுகாப்பு அடிப்படையிலான பதிலைக் கடைப்பிடிப்பது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் லிஸ் த்ரோஸ்ஸெல் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய “யுக்திய” நடவடிக்கையை மீளாய்வு செய்யவும், மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், வலியுறுத்துவதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல், சித்திரவதை செய்தல் மற்றும் தவறாக நடத்துதல் மற்றும் உரிய நடைமுறை மற்றும் நியாயமான விசாரணை உரிமைகளை மறுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் முழுமையாகவும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருளைப் பயன்படுத்துபவர்கள் தொடர்பில், போதைப்பொருளின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் மற்றும் சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஒருங்கிணைக்க உதவும் திட்டங்களை வழங்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் போதும் அதற்குப் பின்னரும், அங்கீகரிக்கப்படாத தேடுதல்கள், தன்னிச்சையான கைதுகள் மற்றும் தடுப்புக்காவல், மோசமான முறையில் நடத்துதல், சித்திரவதை செய்தல் மற்றும் பொது இடங்களில் ஆடைகளை அகற்றுதல் போன்ற பல மீறல்களுக்கு மக்கள் உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் அதிகாரிகளின் மிரட்டலை எதிர்கொண்டதாக கைது செய்யப்பட்டவர்களுக்காகச் செயற்படும் சட்டத்தரணிகளும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தநிலையில் போதைப்பொருள் பயன்பாடு சமூகத்திற்கு ஒரு கடுமையான சவாலாக இருந்தாலும், கடுமையான சட்ட நடைமுறை அணுகுமுறை தீர்வு அல்ல என்று ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளரின் பேச்சாளர் லிஸ் த்ரோஸ்ஸெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த கைதுகள் தமிழ் மக்களை சுற்றிவளைத்து அச்சுறுத்தும் நோக்கில் சிறீலங்கா இனவழிப்புப்படைகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments