தோணி கவிழ்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன்!

You are currently viewing தோணி கவிழ்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன்!

மட்டக்களப்பு – ஓந்தாச்சிமடத்திற்கும் கோட்டைக்கல்லாறு பகுதிக்கும் இடைப்பட்ட ஆற்றில் இன்று தோணியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் ஆற்றில் அள்ளுண்டுபோய் காணாமல்போயுள்ளார்.

குறித்த ஆற்றில் நீர் மிகவும் வேகமாக கரைபுரண்டோடிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த இளைஞன் தோணியில் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அவ்வேளையில் நீரோட்டத்தில் சிக்குண்டு அவரது தோணி கவிழ்ந்துள்ளது. இதன்போது ஆற்று நீரில் அடித்துச் சென்றுள்ளதில் அவர் காணாமல் போயுள்ளார்.

இவ்வாறு காணமால் போனவர் ஓந்தாச்சிமடம் கிராமத்தில் வசித்துவரும், கிழக்குப் பல்கலைக் கழக மாணவன் அன அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த தோடி உடைந்த நிலையில நீர் நிரம்பியவாறு கரை ஒதுங்கியுள்ளது. எனினும் காணாமல்போன இளைஞனை மீனவர்களும், உறவினர்களும் இணைந்து தேடிவருகின்றனர்.

இந்நிலையில் ஸ்தலத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments