இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயார்!

You are currently viewing இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயார்!

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கனடாவிலுள்ள பிரம்டன் நகரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையிலான சின்னமொன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்து கலந்துரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன்படி இந்நினைவுச்சின்னம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பொன்று கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுக்கும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மின்னஞ்சல் ஊடாக தமக்கு உறுதிப்படுத்தியதாக ‘தமிழ் கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தோடு கனடாவின் சமஷ்டி கட்டமைப்பின்கீழ் மாகாண மற்றும் உள்ளுராட்சி அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து வேறுபட்டு சுதந்திரமாக இயங்கமுடியும் எனவும், அவற்றுக்கென தனித்த நிர்வாக அதிகாரங்கள் உண்டு எனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அதன் மின்னஞ்சல் பதிலில் தெரிவித்திருப்பதாக ‘தமிழ் கார்டியன்’ செய்தியில் கூறப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments