இலங்கையில் 2023இற்குப் பின்னரும் பொருளாதாரச் சவால்கள் நீடிக்கும்!

You are currently viewing இலங்கையில் 2023இற்குப் பின்னரும் பொருளாதாரச் சவால்கள் நீடிக்கும்!

2023ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என்று இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையில் உயர்ந்துள்ள நிதித் துறையின் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிலையற்ற அரசியல் நிலைமை என்பன நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்துக்கு குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்திற்கான மூல காரணங்களைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ள உலக வங்கி, கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வெளி மற்றும் சில உள்நாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

2022ஆம் ஆண்டில் 7.8 சதவீதம் சுருங்குவதைத் தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டில் பொருளாதாரம் 4.3 சதவிகிதம் சுருங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவை தொடர்ந்து குறைந்து வருவதால், வேலை மற்றும் வருமான இழப்புகள் தீவிரமடைகின்றன என்றும் விநியோகத் தடைகள் உற்பத்தியை மோசமாக பாதிக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வலுவான மற்றும் நம்பகமான கட்டமைப்பு சீர்திருத்தத் திட்டம் நீண்டகால நெருக்கடியைத் தவிர்க்கவும் தற்போதைய பொருளாதார சிக்கல்களின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியை வலுவான மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இலங்கை பயன்படுத்திக்கொள்ள முடியும் என உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply