இஸ்ரேலுக்கு ஆதரவாக படையெடுக்கும் அமெரிக்க போர் கப்பல்கள்!

You are currently viewing இஸ்ரேலுக்கு ஆதரவாக படையெடுக்கும் அமெரிக்க போர் கப்பல்கள்!

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது விமானம் தாங்கி போர் கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் ஜெருசலேமை கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் மீது நேற்று அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

மேலும் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாக காசா பகுதிக்கு கடத்தி சென்றனர்.

இதையடுத்து பதிலடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், தனது அதிகாரப்பூர்வமான போர் பிரகடனத்தை அறிவித்தது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் ராணுவப்படையினர் பாலஸ்தீனத்தின் மீது தொடர் வான் தாக்குதலை நடத்தி காசா நகரை உருக்குலைத்து வருகின்றனர்.

இந்த மோதலில் இரு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து இருப்பதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது விமானம் தாங்கி போர் கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

அதில் அமெரிக்காவின் விமானம் தாக்கி கப்பல், யூ.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு (சிவிஎன்-78), டிகோண்டெரோகா-கிளாஸ் க்ரூஸர் யுஎஸ்எஸ் நார்மண்டி (சிஜி-60) மற்றும் ஆர் லீ பர்க்-கிளாஸ் டிஸ்ட்ராயர்ஸ் யுஎஸ்எஸ் ராமேஜ் ஆகியவற்றை உள்ளடக்கிய கேரியர் ஸ்ட்ரைக் குரூப்பின் 12 கப்பல்கள் (DDG-61), USS McFaul (DDG-74), மற்றும் USS தாமஸ் ஹட்னர் (DDG-116) ஆகியவை இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் காட்சிக்காக கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

மேலும் இந்த போர் கப்பல்கள் தேவைப்பட்டால் அமெரிக்க மக்களை வெளியேற்ற பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments