இஸ்ரேலுடனான தொடர்பை முறித்துக் கொள்கிறோம்: துருக்கி அதிரடி!

You are currently viewing இஸ்ரேலுடனான தொடர்பை முறித்துக் கொள்கிறோம்: துருக்கி அதிரடி!

இஸ்ரேலுக்கான தூதரை திரும்பப் பெறுவதாகவும், பிரதமர் நெதன்யாகுவுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாகவும் துருக்கி அறிவித்துள்ளது. காசா பகுதியில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீசி தாக்குதல் நடத்தியதை துருக்கி கண்டித்துள்ளது.

இதன் காரணமாக காசாவில் மனிதாபிமான துயரம் தொடர்பாக இஸ்ரேலுக்கான தூதரை துருக்கி திரும்பப் பெறுகிறது.

மேலும், துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இதுகுறித்து கூறும்போது, பிரதமர் நெதன்யாகுவுடனான தொடர்பை முறித்துக் கொள்வதாகவும், ஆனால் காசா விவகாரத்தில் இஸ்ரேலுடனான உறவை துண்டிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் துருக்கிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘காசாவில் பொதுமக்களுக்கு எதிரான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை இஸ்ரேலின் மறுப்பு ஆகியவற்றால் ஏற்பட்ட மனிதாபிமான சோகத்தை கருத்தில் கொண்டு, தூதரான ஸாகிர் ஒஸ்கான் டொருன்லர் (Sakir Ozkan Torunlar) திரும்ப அழைக்கப்பட்டார்’ என கூறியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments