இஸ்ரேலை உலக வரைப்படத்தில் இருந்து அழிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் நாடு தான் ஈரான்!

You are currently viewing இஸ்ரேலை உலக வரைப்படத்தில் இருந்து அழிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் நாடு தான் ஈரான்!

இஸ்ரேலை பொறுத்த வரை ஈரான் விடயத்திலும், ஈரான் உருவாக்கி வைத்துள்ள துணை படைகளை பொறுத்தளவிலும் இரண்டு தெரிவுகள் தான் இருகின்றது. ஈரான் உருவாக்கி வைத்துள்ள பிரச்சினையை இஸ்ரேல் முடிக்கப் போகிறதா அல்லது சமாளித்துக்கொண்டு இருக்க போகிறதா? ஈரான் பிரச்சினையை நிரந்தரமான முடித்து வைக்கும் முடிவை நோக்கி தான் இஸ்ரேல் சென்றுக் கொண்டு இருக்கிறது என்பது களநகர்வுகளை பார்க்கும் போதும் ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.

அதாவது ஈரான் பிரச்சினைக்கு நிரந்தர முடிவை காண்பதற்கு இஸ்ரேல் தயாராகி வருவது போன்று தெரிகின்றது.

அப்படியானால் எப்படி அது முடித்து வைக்கப் போகிறது? சமாதான முறையில் ஈரான் இஸ்ரேல் பிரச்சினையை இஸ்ரேல் முடிழத்து வைக்க சாத்தியமே இல்லை.

சமாதான முறையில் இப்பிரச்சினையை இஸ்ரேல் முடித்து வைக்காமல் இருப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. இஸ்ரேலை உலக வரைப்படத்தில் இருந்து அழிப்பதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வரும் நாடு தான் ஈரான். இஸ்ரேலுடனான ஓர் தீர்விற்கு ஈரான் ஒருபோதும் முன்வரமாட்டாது.

2. அமெரிக்கா. மத்தியக்கிழக்கை பொறுத்தளவில் அமெரிக்காவின் யுத்தத்தை தான் இஸ்ரேல் புரிந்துக்கொண்டு இருக்கிறது. ஈரான் என்பது இஸ்ரேலின் எதிரி என்பதை விட, ஈரான் என்பது அமெரிக்காவினால் முக்கியமான விரோதியாக பார்க்கப்பட்டு வருகின்ற தேசம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments