ஈரானின் தாக்குதலை கண்டு பதறும் தலைவர்கள்!

You are currently viewing ஈரானின் தாக்குதலை கண்டு பதறும் தலைவர்கள்!

இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்த ஈரானின் செயலை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கடுமையாக கண்டித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் ரிஷி சுனக், குறித்த தாக்குதலானது பதட்டங்களைத் தூண்டி, பிராந்தியத்தை சீர்குலைக்கும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஈரான் தனது சொந்த கொல்லைப்புறத்தில் குழப்பத்தை விதைக்கும் நோக்கத்தில் உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என்றார் ரிஷி சுனக்.

இந்த இக்கட்டான கட்டத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஆதரவளிக்கப்படும் என்றும், அத்துடன் ஜோர்தான் மற்றும் ஈராக் தொடர்பிலும் கவனம் செலுத்தபப்டும் என்றார்.

மேலும், நட்பு நாடுகளுடன் சேர்ந்து, நிலைமையை கட்டுப்படுத்தவும், மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவும் பிரித்தானியா அவசர நடவடிக்கை முன்னெடுக்கும் என்றும் ரிஷி சுனக் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, வெள்ளைமாளிகையில் அவசர கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலுக்கான ஆதரவு என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேல் மக்களுடன் நின்று அவர்களின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்யும் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments