ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், பழி தீர்ப்போம் என்று கூறியுள்ளது. இதனால், பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அனைத்து தரப்பும் நிதானத்தை கடைபிடிக்குமாறு சீனா கோரிக்கை விடுத்துள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூங் கூறியதாவது:- “ சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பும் குறிப்பாக அமெரிக்கா, பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிக்காமல் இருக்க நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்” என்றார்.