தமிழ்நாட்டில் கொரோனா நெருக்கடி நிலை உச்சம் பெற்று வரும் நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்றுவருபவர்களது எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (மே-24) மாலை வரையான நிலவரத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் நேற்று மலையுடனான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தொற்றுதியானவர்களது எண்ணிக்கை 34 ஆயிரத்து 867 ஆக பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 4 ஆயிரத்து 985 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிகிச்சை பலனின்றி 81 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் சென்னையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது எண்ணிக்கை 4 இலட்சத்து 83 ஆயிரத்து 757 ஆகவும் உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 6 ஆயிரத்து 460 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 18 இலட்சத்து 77 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் சிகிச்சை பலனின்றி மேலும் 404 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 3 இலட்சத்து ஆயிரத்து 580 ஆக உயர்வடைந்து முதல் முறையாக 3 இலட்சத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.