உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இந்த சூழலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் 8 ஐரோப்பிய நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சவுதி அரேபியா, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஹாங்காங் உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்து உடனான சர்வதேச விமானப் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளன. இந்த நிலையில் உலக நாடுகள் கொரோனா மருத்துவப் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன. சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 9,54,55,601 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,81,49,491 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 20 லட்சத்து 38 ஆயிரத்து 936 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 2,52,67,174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,13,216 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
தொடர்ந்து அதிகபட்ச பாதிப்புள்ள நாடுகளின் விபரம்:-
பிரான்ஸ் – 29,10,989
துருக்கி – 23,87,101
இத்தாலி – 23,81,277
ஸ்பெயின் -22,52,164
ஜெர்மனி – 20,50,099
கொலம்பியா – 19,08,413
அர்ஜென்டினா – 17,99,243
மெக்சிகோ -16,30,258
போலந்து – 14,35,582
தென்ஆப்பிரிக்கா – 13,37,926