“உலகம் முழுவதும் வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும், கொறோனா எண்ணிக்கைகள் நாளைக்கு நாள் அதிகரித்துக் கொள்கின்றன. இன்று (22.03.20) 300’000 பேருக்கு மேற்பட்டோருக்கு கொறோனா என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது வரை ஏறத்தாழ 13’000 பேர் கொவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர். 95’000ற்கும் மேற்பட்டவர்கள் இன்று வரை குணமடைந்துள்ளார்கள். 169 நாடுகளில் கொறோனா தொற்றியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.” என அமெரிக்காவின் பல்கலைக்கழகம் யோன் கோப்கின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் ஒரு வாரத்திற்குள் கொறோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொழுது 24’000 பேருக்கும் மேற்பட்டவர்களிற்கு கொறோனா தொற்றியுள்ளதையும் யோன் கோப்கின்ஸ் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Translation: R.Nithurshana
Source: 20min