நோர்வேயில் “கொரோனா” பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்படுவதோடு, அனைத்து பொதுப்போக்குவரத்துக்களும் நிறுத்தப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.
மேற்படி நோர்வே சுகாதார அமைப்பு தயாரித்திருக்கும் அறிக்கையொன்றில், “கொரோனா” பரவலால் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும், அனைத்து பொதுப்போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட வேண்டுமெனவும், குறித்த பகுதிகளிலிருந்து யாரும் வெளியேறவோ அல்லது உள்நுழையவோ தடைவிதிக்கப்பட வேண்டுமெனவும் அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
“கொரோனா” வால் மிகவும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் கடைப்பிடிக்கும் கட்டுப்பாட்டு முறைமைகளை உன்னிப்பாக அவதானித்து, தேவைப்படின் அந்த கட்டுப்பாட்டு முறைமைகளை நோர்வேயிலும் நடைமுறைக்கு கொண்டுவருவது பற்றியும் நோர்வே அரசு சிந்திக்க வேண்டுமெனவும் தெரிவித்திருக்கும் நோர்வே சுகாதார அமைப்பு, தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுக்கான பற்றாக்குறையால், “கொரோனா” வால் பீடிக்கப்பட்டிருப்பவர்களை கவனிக்கும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பணிகளுக்கு வர மறுப்பதாக வெளிவந்துள்ள செய்திகளையிட்டு கவலை கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.