நோர்வே நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் – விண்ணப்பிப்பது எப்படி?

You are currently viewing நோர்வே நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் – விண்ணப்பிப்பது எப்படி?

நார்வே நாட்டுக் கல்விக் கொள்கையினைப் பொறுத்தவரை, சமூக/இனப் பின்னணியினைக் கருத்தில் கொள்ளாது, எல்லோருக்கும் சமமானக் கல்வியை வழங்கிட வேண்டும் என்பது அடிப்படை விதி.

நார்வே நாட்டில் அரசு நடத்தும் 9 பல்கலைக்கழகங்கள், 8 பல்கலைக்கழகக் கல்லூரிகள், 5 ஆராய்ச்சிக் கல்லூரிகள் உள்ளன. இதனோடு, அரசின் நிதியுதவியோடு இயங்கும் பல்வேறு பல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் உள்ளன.

நார்வே நாட்டுப் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை ஆங்கில வழி இளநிலை பட்டப்படிப்பு மிகக் குறைவு. பெரும்பான்மையாக, நார்வேஜிய மொழியிலேயே இருக்கிறது. முதுநிலைப் பட்டப்படிப்பு பன்னாட்டு மாணவ, மாணவியருக்காக ஆங்கில வழியிலும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்பில் நார்வே நாடு இல்லையெனினும், ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அமைச்சகம் ஏற்படுத்தியக் கூட்டமைப்பான போலாங்க்னோ கல்வித்திட்டத்தில் (Bologno Process) நார்வே நாடும் அங்கம் வகிப்பதால், நார்வேயின் உயர்கல்வி, அனைத்து ஐரோப்பிய நாடுகளின் பொதுவான அங்கீகாரம் பெற்றவையாக இருக்கிறது. அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இளநிலை, முதுநிலை, முனைவர் ஆய்வு என 3+2+3 வருட கல்வித்திட்டத்தில் இயங்குகின்றன, எனினும், சில பல்கலைக்கழகங்களில் 5 வருட தொடர் முதுநிலை பட்டப்படிப்புகளும், 6 வருட தொழிற்முறை படிப்புகளும் (Professional Courses), 4 வருட இளநிலை இசை மற்றும் கலைப்பாட பட்டப்படிப்புகளும் உள்ளன.

நார்வே நாட்டுக் கல்விக் கொள்கையினைப் பொறுத்தவரை, சமூக/இனப் பின்னணியினைக் கருத்தில் கொள்ளாது, எல்லோருக்கும் சமமானக் கல்வியை வழங்கிட வேண்டும் என்பது அடிப்படை விதி.

உலகில் உள்ள எவரும் நார்வே நாட்டிற்கு கல்வி கற்க வரலாம். கல்வி முற்றிலும் இலவசம். மாணவச் சங்கங்கள், ஏனைய சிறு கட்டணம் என வருடத்திற்கு 10,000 ரூபாய் வரை ஆகலாம் மற்றும் சில முதுநிலைப் பட்டப்படிப்பிற்கு வருடத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையில் கூடுதல் கட்டணம் ஆகலாம். தனியார் பல்கலைக்கழகங்களில் மட்டும் வருடத்திற்கு ரூ.5,50,000 முதல் ரூ.25,00,000 வரை செலவு ஆகும். இலவசக்கல்வியோ, மிகக்குறைந்த அளவிலான கல்விக்கட்டணமோ உள்ள எல்லா நாடுகளிலும், வசிப்பதற்கான வருடாந்திரச் செலவினை, மாணவ நுழைவுரிமை/நுழைவிசைவு (Students Visa) விண்ணப்பிக்கும் முன்பே, நாம் கட்டாயம் நம் வங்கிக்கணக்கில் வைத்திருக்க வேண்டும். பல நாடுகளின் வங்கிகளுடன் கூட்டுத்திட்டம் செயற்படுத்தி வருவதால், மாதாந்திரச் செலவிற்கான தொகை மட்டும் மாதாமாதம் நம் கைகளுக்கு எட்டும் படி வடிவமைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் இது மாறுபடும். நார்வேக்கான வருடாந்திரச் செலவிற்காக நாம் வங்கியில் வைத்திருக்க வேண்டிய தொகை 10 லட்ச ரூபாய். 2023 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் பட்டப்படிப்பிற்கு அக்டோபர் 1லிருந்து விண்ணப்பிக்கலாம். சில பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பிற்கு ஏற்றவாறு தேதிகளில் சிறு மாறுதல்கள் இருக்கலாம். ஆனால், தோராயமாக, அக்டோபர் முதல் வாரம் தொடங்கி டிசம்பர் முதல் வாரத்திற்குள் அனைத்துப் பல்கலைக்கழக விண்ணப்பங்களும் நிறைவடைந்துவிடும்.

Norway University
Norway University

இந்திய மாணவ, மாணவிகள் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர +2 நிறைவு செய்துவிட்டு, பல்கலைக்கழகப் பட்டப்பில் குறைந்தது ஓராண்டினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், தகவல் அறிய, https://www.nokut.no/en/foreign-education/GSU-list/ என்ற முகவரில் வாசிக்கலாம்.

1. நார்வே நாட்டுப் பல்கலைக்கழகங்கள்:

நார்வே நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பற்றி அறிய கீழே உள்ள இணையதளம் செல்க:

https://www.nokut.no/en/foreign-education/how-do-i-apply-for-admission-to-study-in-norway/

https://www.studyinnorway.no/

https://www.studyinnorway.no/study-in-norway/application-admission

2. நார்வே பல்கலைக்கழகத் தரவரிசை

நார்வே நாட்டுப் பல்கலைக்கழகங்களின் தர வரிசை பற்றி அறிய:

https://www.timeshighereducation.com/student/where-to-study/study-in-norway

https://www.topuniversities.com/where-to-study/europe/norway/guide

3. பட்டப்படிப்பு நுழைவு விதிமுறைகள்

3அ) இளநிலை கல்வி:

https://www.nokut.no/en/foreign-education/GSU-list/

3ஆ) முதுநிலை கல்வி:

https://www.nokut.no/en/foreign-education/frequently-asked-questionsgr/

4. ஆங்கிலப்புலமைத் தேர்வு

ஆங்கிலப் புலமை சோதனையில் (English Proficiency test) குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

https://www.uio.no/english/studies/admission/master/english-proficiency-master.html

https://www.ntnu.edu/studies/langcourses/languagerequirements

https://www.uib.no/en/education/49142/english-language-requirements-masters-programmes-taught-english

https://www.studyinnorway.no/study-in-norway/application-admission/Requirements-for-proficiency-in-English

5. விண்ணப்பிக்கும் முறை:

இவையனைத்தையும் அறிந்த பின் விண்ணப்பங்கள் குறித்தும் அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும் அறிந்துக்கொள்ளல் வேண்டும்.

https://fsweb.no/soknadsweb/velgInstitusjon.jsf https://fsweb.no/soknadsweb/login.jsf?inst=ntnu என்ற முகவரில் வழியே ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கு ஏற்றவாறு, பக்கங்களை தேர்ந்தெடுத்து, கேட்கப்பட்டக் கேள்விகளுக்கு பதிலும், கேட்கப்பட்டுள்ள சான்றிதழ்களை கொண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஐரோப்பாவில் உயர்கல்வி - 3 | நார்வே நாட்டில் உயர்கல்வி வாய்ப்புகள் - விண்ணப்பிப்பது எப்படி?
UiT

6. விண்ணப்பிக்கும் நாட்கள்:

ஒவ்வொரு வருடமும், அக்டோபர் முதல் வாரம் முதல் டிசம்பர் முதல் வாரத்திற்குள்ளாக விண்ணப்பிக்க வேண்டிய வரும்.

7. வாழ்க்கைச் செலவு:

இவ்வாண்டுத் தகவலின் படி, 128887 நோர்வேஜிய குரோணர், அதாவது கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் ஒவ்வொரு ஆண்டு நுழைவிசைவு (visa) விண்ணப்பிக்கும் பொழுதும், வங்கியில் கையிறுப்பு வைத்திருக்க வேண்டும்.

https://www.udi.no/en/want-to-apply/studies/studietillatelse/?c=ind#undefined

8. மாணவ நுழைவிசைவு (Student Visa)

சுவீடன் நுழைவுரிமை மற்றும் வதிவிட உரிமை (residence permit) விண்ணப்பம் சமர்பிப்பது தொடர்பாக, கீழே உள்ள இணைய நார்வே நாட்டின் குடிவரவு இணைய முகவரியில் படிக்கவும்.

https://www.udi.no/en/want-to-apply/studies/

9. நார்வே நாட்டு கல்வி ஊக்கத்தொகை

நார்வேயுடன் இணைந்து பலநாட்டு அரசுகளும் தத்தமது மாணவ, மாணவிகளுக்கென பலவகை ஊக்கத்தொகைகளை வழங்கிவருகின்றன. இந்திய மாணவ, மாணவிகளைப் பொறுத்தவரை, பல்கலைக்கழக அளவிலான சில ஊக்கத்தொகைகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான ஊக்கத்தொகைகளும் உண்டு. ஐரோப்பிய ஊக்கத்தொகை குறித்துத் தனியே பார்க்கலாம்.

10. நார்வே நாட்டுப் பல்கலைக்கழகங்கள்

– University of Oslo

– University of Bergen

– Norwegian University of Science and Technology

– University of Stavanger

– Western Norway University of Applied Sciences

– University of Tromso

– University of Agder

– University Center in Svalbard

– Norwegian School of Economics

– Norwegian University of Life Sciences

– University of Nordland

-கலாநிதி.விஜய் அசோகன்-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments